பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புனிதவதி புனித. 2 : ஆம். லட்சியமுடையபொழுது பிறவி சிறந்ததுதான். லட்சியத்தையடைய இந்த உடம்பு இன்றியமையாததல்லவா? பரம : அடியார்கட்கு லட்சியம், அதன் பயன் என்ற இரண்டும் ஒன்றுதான். லட்சியம் இறைவனைக் கும்பிடுதல், அதன் பயனும் அதுவே. ஆகவே, அவர்கள் எங்காவது ஓரிடத்தில் இறைவனைக் கும்பிட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறார்கள். புனித. 2 : அம்மையாரும் அப்படியே விரும்பினாரா? பரம ஆம். இறைவர் யாது வேண்டும் என்று கேட்டாராம். உடனே அம்மையார், 'பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புஉண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க வேண்டும்' என்று பாடினார். திரை