பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி 215 சர என்ன அமைச்சரே, கோவிலினுடைய சிறப்பையும் விமரிசையையும் பார்த்தீரா? அமை : மன்னாதி மன்னர் சரபோஜியாருடைய 守可 சர

  • - :

அபி ساb சர : கோவில்கள் நன்கு நடைபெறுவதில் ஆச்சரிய மென்ன? நல்லது. ஆண்டவனுடைய சந்நிதானத்தில் அரசனாவது, குடிகளாவது! எல்லோரும் ஒன்று தான். இதோ இங்கே துரண் பக்கத்தில் உட்கார்ந் திருக்கின்ற இவர் யார்? - மகாராஜா, கடவூர்ப்பட்டர் மகன் அபிராமி பட்டன் இவன்தான். மகா அகங்காரம் பிடித்தவன்! என்ன பட்டரே, இப்படிச் சொல்கிறீர்? அவருடைய முகத்தைப் பார்த்தால் பெரிய சாந்த நிலையில் இருப்பவர்போலத் தெரிகிறதே! - அவ்வளவும் வேஷம் மகாராஜா கண்ணை மூடிக் கொண்டிருப்பதெல்லாம் ஏமாற்று வித்தை! ஏய், அபிராமி பட்டா, எழுந்து நின்று மரியாதை செய். இதோ சரபோஜி மகாராஜா வந்திருக்கிறார்.

ஒம் சக்தி, சக்தி, சக்தி,

பார்த்தீர்களா மகாராஜா, நீங்கள் வந்திருப்பதை அறிவித்துங்கூட இந்தப்பயல் எழுந்து மரியாதை செய்யவில்லையே! - - - அமைச்சரே, நீர் என்ன நினைக்கிறீர்? அமை : அரசே, நீங்கள் நினைப்பதுபோல யானும் இவருடைய முக ஒளியில் ஈடுபட்டுவிட்டேன். வீண் அகம்பாவக்காரனுக்கு இவ்வளவு அமைதி முகத்தில் நிலவ முடியாது. இவரிடம் கொஞ்சம் பேசிப் பார்த்தால் உண்மை விளங்கும். தெ.ந.-15