பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ( அருள் ஒளி சர : நடராஜ பட்டர் சொல்லுவதும் உண்மைதான் போல இருக்கிறது! அபிராமி பட்டரே, மது உண்ட மயக்கத்தில் இருக்கின்ற நீர், கோயிலில் இருக்க அருகதை உடையவர் அல்லிர், பாரும் உம்மை என்ன செய்கின்றேன் என்று! வாரும் அமைச்சரே, காவிரிப் பூம்பட்டினம் சென்றுவிட்டு வரும்பொழுது பார்க்கலாம். (அரசர் போகின்ற ஆரவார ஓசை) காாட்சி 3 (திருக்கடவூர்க் கோவில்: கடவூர் பட்டர், அபிராமி பட்டர்) கடவூ என்ன அபிராமி, மகாராஜா வந்திருந்த போது, அபி உளறிவிட்டாயே?-அரச தண்டனை தப்பாமல் கிடைத்துவிடுமே!

என்ன அப்பா, என்ன நிகழ்ந்தது? எனக்கு ஒன்றுமே

தெரியாதே! . கடவூ : தெரியாதாவது? அமாவாசையாகிய இன்றைக்கு என்ன திதி என்று கேட்டபொழுது, பெளர்ணமி என்று சொல்லிவிட்டாயே! போதாததற்கு நடராஜன் வேறு அரசன் கோபத்தைக் கிளறிவிட்டான்! நீ ஏன் பெளர்ணமி என்று சொன்னாய்?

எனக்கு ஒன்றுமே தெரியாதப்பா! தேவியினுடைய

முகமண்டிலத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு எல்லாம் ஒளி மயமாகக் காட்சி அளித்தது. அவர்கள் கேட்ட கேள்வியே எனக்குத் தெரியாது. என்னையும் அறியாமல், தேவியினுடைய முகம், பூர்ண சந்திரன் போல இருந்தது என்று சொல்லி இருப்பேன். அதற்காக அரசர் கோபித்துக்கொண்டால் நான் என்ன செய்வது? . . -