பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி 221 +– குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழைப்பொரு கண்ணுமென் நெஞ்சில்எப் போதும் உதிக்கின்றவே ! காட்சி 4 (காவிரிப்பூம்பட்டினக் கடற்கரை சரபோஜி மகாராஜா, அமைச்சர்) சர ஆஹா! அமைச்சரே, ஒடி வாரும்! இதோ பாரும் பூரண சந்திரன் உதயமாகிவிட்டதை ஆ! அபிராம பட்டரே, உம்மை இகழ்ந்து விட்டேன்! என்னை மன்னித்துவிடும்! - அமை : தூரத்தே இருந்து ஓடிவரும் ஓசை) அரசே, ... அரசே இதென்ன? கனவு கண்டீர்களா? இன்று அமாவாசை ஆதலால்தானே காவிரிப் பூம் பட்டினம் வந்து முகாம் தங்கியுள்ளோம்?... பூரண நிலவு புறப்பட்டுவிட்டதாகக் கூறினரீர்களே! சர : அமைச்சரே, வேறு ஒன்றுமில்லை. கனவு கண்டேன். அமை : அப்படியா! என்ன கனவு: சர நானும் நீரும் கடற்கரையில் நின்றுகொண்டிருக் கின்றோம். அபிராமி பட்டரைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவரும் வந்து விட்டார். என்னைப் பார்த்து அவர் கூறினார். - அமை : என்ன? அனைத்தும் கனவிலா? என்ன கூறினார்? சர : அரசே, இதோ பாரும் கீழ்த்திசையில் பூர்ண சந்திரன் உதயமாவதை : என்று கூறினார். மேலும், 'கான்