பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 அருள் ஒளி - கூறினதை அபிராமி உண்மையாக்கிவிட்டாள் பார்த்தீர்களா? என்றுங் கூறினார். அமை : அந்த நிலையிலேதான் நீங்கள் விழித்து என்னை அழைத்தீர்கள் போலும்! சர ஆம், அமைச்சரே, என்ன அதிசயம் பார்த்தீரா? அவரைக் கண்டதிலிருந்து என் மனம் ஏதோ ஒரு பெரிய அமைதியை அடைந்துவிட்டது போலக் காண்கிறது! வாரும் விரைவில் சென்று அவரைக் க்ாண்போம். காட்சி 5 - (திருக்கடவூர்க் கோவில் : சரபோஜி மகாராஜா, அமைச்சர், அபிராமி பட்டர்) சர : அபிராமி பட்டரே, உம்மைக் கண்டு வணங்க வந்துள்ளேன். அபி : அரசே, நான் யார் உம்மால் வணங்கப்படுவதற்கு? திதியைக்கூட அறியாத ஒர் ஏழை நான். சர : பெரியவரே, திதியும் நாளும் எம்போன்ற மனிதர்கட்கு வேண்டும். இறைவியின் பூரண அருளைப் பெற்ற அன்பராகிய உமக்கு இவை தெரிந்து ஆக வேண்டு வதென்ன? - அபி : என்றாலும், அமாவாசையைப் பூர்ணிமை என்று கூறியது தவறுதானே? சர : நீர் கூறியதைத் தவறு இல்லாமல் செய்துவிட்டாள் அம்மை! - - அபி : அப்படியா! அவள் விஷயமாக அபிராமி அந்தாதி என்னும் நூலைப் பாடினேன். எவ்வாறு தவறு இல்லாமல் செய்துவிட்டாள்?