பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி 223 சர : அபி 母可 அபி : சர : நேற்றுப் பூரண நிலவின் ஒளியை நான் கண்ணாரக் கண்டேன். அரசே, நீங்கள் கண்டது பூரண மதியின் ஒளியன்று. அபிராமி தேவியின் அருள் ஒளியே ஆகும். பட்டரே, எனது மதிப்பின் அடையாளமாக இறையிலியாகச் சில நிலங்களை உங்கட்கு. அரசே, மன்னிக்கவேண்டும்! அவள் திருவருளைத் தவிர யான் வேண்டுவது வேறு ஒன்றும் இல்லை. அதுபற்றிக் குற்றம் இல்லை. தேவியின் திருவருளில் திளைக்கும் உங்கட்கு அது வேண்டாவிட்டாலும், உங்கள் சந்ததியாருக்காவது பயன்படட்டும். ஆஹா! நான் கண்ட அந்தப் பூரண சந்திரோதயமும் அதன் ஒளியும்...! அபி : அரசே, நீங்கள் கண்டது சந்திரன் ஒளியன்று. அது தேவி பராசக்தியின் அருள் ஒளியே தவிர வேறு அன்று. - சர : ஆம்! ஆ! உங்கள் கிருபையால் யானும் தேவியின் அருள் ஒளியில் சற்று மூழ்கி இருந்தேன்! ஒம் சக்தி: (திரை)