பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இளையவன் இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்துக் காட்டார் அந்தரம் உணர்தல் தேற்றார் அருங்கவிப் புலவ ரம்மா! (கதவு தட்டும் சத்தம்) : யாரது? புவவன் வீட்டிற்குத் தாழிடுவதில்லை. திறந்து கொண்டு வாருங்கள் உள்ளே, அமை : புலவரே, உம்மை மகாராஜா காணவேண்டு மென்கிறார். உடனே புறப்பட்டு வாரும். புல : முதலில் நீர் யார் என்பதைக் கூறும் பிறகு உம்முடைய மகாராஜா யார் என்பதைக் கூறும். அமை என்னைத் தெரியவில்லையா? நான்தான் இலங்கையின் முதல் அமைச்சன். மகாராஜா என்றால் யார் என்பதுகூடத் தெரியவில்லையா? கண் மங்கும் வயதில் நினைவும் தேய்ந்துவிட்டதோ? விபீஷண சக்கரவர்த்தியார்தான். உம் புறப்படும். புல (வாய்விட்டுச் சிரிக்கிறான்) ஹா.ஹா. அமை : புலவரே, என்ன சிரிப்பு? யாரைப் பார்த்துச் சிரிக்கிறீர்? . புல : உம்மைப் பார்த்தும் உம் மகாராஜாவின் ஆணையைக் - கேட்டுந்தான் சிரிக்கிறேன். . அமை : சிரிப்புக்கு என்ன காரணம்? புல புதிதாகக் கிடைத்த பட்டம். அதுவும் முறை தவறிக் கிடைத்ததுதானே? ஆட்சி முறை என்ன தெரியப் போகிறது! . அமை : நிறுத்தும்! என்ன உளறல் இது? புல உளறவில்லை. அப்பனே! கேவலம் ஒரு புலவனை அழைத்து வருவதற்குச் சேவகன் ஒருவனை