பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் 227 அனுப்பாமல் ஓர் அமைச்சரே புறப்பட்டு வந்த விந்தையே விந்தை! - அமை. ; நீர் ஒரு புலவர் என்று மதித்துத்தான் நானே அழைக்க வந்தேன். இதில் என்ன தவறு? புல இல்லை. என்னைப் புலவன் என்று அழைப்பதானால் இப்படி வரமாட்டீர்; விருதுகளோடு அழைக்க வந்திருப்பீர். நான் அறிவேன் உண்மைக்காரணத்தை. அமை : தெரிந்தால், சொல்லும் பார்க்கலாம்! புல : சேவகன் வந்து அழைத்தால் நான் வரமாட்டேன் என்பது உமக்குத் தெரிந்திருக்கும். ஆகையால், மந்திரியாராகிய நீரே வந்துவிட்டால் அதில் மயங்கிப் போய் நான் வந்துவிடுவேன் என்று நீர் நினைத்து வந்தீர். அல்லவா? - அமை : நீர் அவ்வாறு சொல்லக் காரணம் என்ன? புல : காரணம் இருக்கிறது. பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்டவர் உங்கள் மகாராஜா. அல்லா விட்டால் உம்பரும் பிறரும் போற்ற மூவுலகை ஆண்ட அண்ணனைக் காட்டிக் கொடுத்திருப்பாரா? அதேபோலப் பிறரும் ஆசைப்படுவர் என்று நினைத்துவிட்டார் அல்லவா? - அமை : என்ன சொன்னீர்! இதோ என் வாளுக்கு இரையாகப் போகிறீர் நீர்! உமது பிழையை உணர்ந்து மன்னிப்பு வேண்டும். அன்றேல். புல : மன்னிப்பு எதற்கு? உண்மை என்றைக்கும் அஞ்சாதே! நேரே உம் அரசரிடம் வேண்டுமானாலும் இதைக் கூறுகிறேன். அவர் நெஞ்சில் கையை வைத்து, 'இல்லை என்று கூறட்டும், பார்க்கலாம். அமை : நீர் இலங்கையின் பிரஜை என்பதை மறந்து பேசுகிறீர்! அரசருடைய காரியங்கள் என்ன வென்று