பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 () ഉണlഖ് கற்பனையில் புரளும் புலவருக்கு என்ன தெரியப்போகிறது? சரி, புறப்படும். போக வேண்டும். புல : அமைச்சரே, நான் யார் என்பதை அறியாமல் பேசுகிறீர். நீர் சொல்லுகிற வீடணரை நான் என்றைக்கும் அரசர் என்று ஒப்புக்கொள்ளவில்லை. இராவணர் இருந்தவிடத்தில்... அமை : பெருந்தவறு செய்ததனால்தானே இராவணர் உயிரை இழந்தார்? அதைப்பற்றி ஏன் இப்பொழுது பிதற்றுகிறீர்? - புல : பேரறிவுடைய இராவணர் தவறு செய்தது உண்மை. அதற்குத் தகுந்த தண்டனையை அவர் அனுபவித்து விட்டார். அவர் பெருமைக்கும் தவற்றுக்கும் ஏற்ப முழுமுதற் பொருளே அவரைத் தண்டித்தது. ஆனால். அமை : என்ன ஆனால்? புல உம் அரசர், தமையனாருடன் இருந்திருந்து போர் செய்து தப்பி இருந்தால், பிறகு அரசாள்வது சரிதான். ஆனால், அவருக்கு விரோதமாகச் சதி செய்து அவர் அழிவைத் தேடியல்லவா பட்டம் பெற்றார்? அந் நன்றி கெட்டவரது முகத்தில்கூட நான் விழிக்க மாட்டேன்! . வேண்டுமானால், என்னைக் கொன்றுவிடும்; அல்லது உம் அரசரிடம் போய்ச் சொல்லும். . - அமை : சரி இரும்! நான் அரசரிடம் தெரிவித்து அவர் விருப்பம் அறிந்து வருகிறேன். . - 3 (அரண்மனை அந்தப்புரம் வீடணன், திரிசடை) கிரிசடை : அப்பா, எங்குச் சென்றிருந்தீர்கள் இவ்வளவு நேரம்? - r .