பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தெள்ளாற்று நந்தி மங் : உங்கள் உயர்வில் மட்டும் பங்கு கொள்ளும் உங்கள் காதல் பரத்தையாகிய செல்வி என்று என்னையும் நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் வாழ்ந்தால் அவளும் வாழ்வாள், வீழ்ந்தால் அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல் அவள் அது பற்றிக் கவலைப்பட மாட்டாள். அடுத்து, வாழ இருப்பவனை நாடுவதே அவளுடைய தொழில். ஆனால், என்னை நினைந்து பாருங்கள், வாழ்விலும் தாழ்விலும் நீங்களே எனக்குக் கதி. காகத்தின் இரு கண்ணுக்கும் ஒரு விழி இருப்பதுபோல் நம் இருவர்க்கும் இன்ப துன்பம் ஒன்றுதான். எப்படியும் தங்கள் போக்கைத் தடுத்தே தீருவேன். உங்கள்மேல் ஆணை. - இள : (தனக்குள் பேசுவதுபோல்) இவளிடம் கூறினால் தீமையே விளையும். (உரக்கக் கூறுதல்) சரி மங்கை, உன் மனக் கருத்துப்படியே நடந்து கொள்கிறேன்; கவலைப்படாமல் உறங்கு.

  • * 喪

(அரண்மனைக் கொலு மண்டபம், அரசன், அமைச்சன் முதலியோர்கள்.) காவலன் : ராஜாதி ராஜ ராஜ கம்பீர, தெள்ளாற்று எறிந்த நந்தித் தொண்டைமான்; பல்லவர் கோளரி, அவ நாரணன் பராக். அமை : அரசே வருக வருக! அனைவரும் தங்கள் வருகைக் காகக் காத்து நிற்கின்றனர். புலவர் பெருமான் பெருந்தேவனார், தாங்கள் பெற்ற தெள்ளாற்று வெற்றியைப் பாடியுள்ளார். நந்தி : அப்படியா செய்தி. புலவர் பாடியுள்ளார் என்றால் அதைக் கேட்டு அனுபவிப்பதுதான் முதற் கடமை?