பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 11 ம1ங் : மங் ហស៍ வந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற திமிரா? எதுவாக இருப்பினும் இவனை விடப்போவதில்லை! காரணமின்றிச் சினங் கொள்ளவேண்டா ஐயனே. அவர் பெருந்தன்மை காரணமாகவே உங்கள் இருவரையும் மன்னித்துவிட்டார். அது மட்டுமா? உங்கட்கு இளவரசு உரிமையையும் வழங்கியுள்ளார். அனைவரும் உங்களை மதித்து நடக்கவும் கட்டள்ை இட்டுள்ளார்.

மங்கை, இது பெரிய அரசியல் விஷயம், இதில் நீ

தலையிட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டா. ஆனால், என் மனக்கருத்தை.

(குறுக்கிட்டு) மாற்றிக்கொள்ள மாட்டீர்களா, உங்கள்

நலந் தீங்குகளில் உங்கள் மனைவிக்கும் பங்குண்டு என்பதைக்கூடவா மறந்துவிட்டீர்கள்? : மறக்கவில்லை. ஆனால், நீ என் வாழ்வு முன்னேற்றத்திற்கே தடையாக இருந்தால் உன்னை என் செய்வது? தமிழ் நாட்டுப் பெண் கணவன் முன்னேற்ற்த்திற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் விந்தையை உன்னிடந்தான் காண்கிறேன். காதலரே, முன்னேற்றத்திற்கு நானா தடையாக இருப்பேன்; ஆனால், தாங்கள் அறிவை இழந்து படுகுழியில் விழ முயன்றால் அதனைத் தடுப்பது என் கடமையன்றோ? தவறான வழியில் செல்பவர்களை உண்மைக் காதல் தடை செய்யாமல் இருக்குமா? என் உடம்பில் உயிருள்ளவரைத் தாங்கள் இத்தவறான வழியில் செல்வதைப் பார்த்துக்கொண்டு வாளா இருக்கமாட்டேன். உங்கள்மேல் ஆணை. ஆ. மங்கை: இதென்ன அறியாமை? ஏன் ஆணை இடுகிறாய்?