பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தெள்ளாற்று நந்தி உண்டாகிவிடும் என்ற அச்சத்தால்தான் விட்டு விட்டான். மங் : "அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழை இருந்தான் கூறல் கடன்" என்பது தமிழ் மறையின் கட்டளை. உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் கூறித் தீரவேண்டியது என் கடமையாகும். "தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல் காத்துச் சோர்விலாது" கடமையைச் செய்ய வேண்டியவள் நான். இள : (கேலியும் சினமும் நிறைந்த குரலில்) வள்ளுவர் வகுத்த வழி நிற்கும் தமிழ்ப் பெண்ணே!. உன் உபதேசம் என்னவாம்? கூறிவிடு. கேட்கச் சித்தமாக இருக்கிறேன். மங் : இளவரசே அரசியல் சூழ்ச்சியை அறிந்து கொள்ளும் அறிவைக்கூட ஆத்திரம் மறைத்து விட்டதா? குழப்பத்தைத் தடுக்க விரும்பி இருந்தால் மன்னர் என்ன செய்திருப்பார் தெரியுமா? இள : (கேலிக் குரலில் அறிவுக் களஞ்சியமே! அதையுந்தான் நீயே சொல்லிவிடு பார்க்கலாம். மங் : குழப்பத்திற்குக் காரணமான உங்கள் இருவரையும் உடனே கொன்றிருப்பார். மன்னித்து வாழ விட்டால் மேலும் மேலும் குழப்பம் ஏற்பட்டுக் கொண்டே அல்லவா இருக்கும்? உங்கட்கு வேண்டியவர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் நீங்கள் உயிருடன் இருக்கும்வரை கலகம் செய்து கொண்டே தான் இருப்பார்கள். இள பின்னர் ஏன் அந்த முட்டாள் எங்களை மன்னித்து விட்டான்? எங்களால் மீண்டும் படை திரட்டி எதிர்க்க முடியாது என்ற மமதையா? திரட்டி