பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 9 இள மங் : இள : மங் இ 6了 தொண்டைமானை எதிர்த்தீர்கள். பலன் என்ன ஆயிற்று? ஒரே நாளில் அவ்வளவு பெரிய சேனையையும் தோற்று, இருவருமே மன்னரிடம் சிறைப்பட்டீர்கள். ஏன் தோற்றோம் என்று தெரியாதா உனக்கு? என்னதான் இருந்தாலும் அவன் பல்லவச் சக்ரவர்த்தி. எனக்குத் துணை வந்தவர்கள் கூலிப் படைகள்தாமே? - மன்னருடைய பலத்தைப் பெரிதாக்கிக் கூறுவதன் மூலம் உங்கள் தோல்வியை எளிதாக்கிவிடவேண்டா. அவரும் இரட்டபாடிப் போரில் இராஷ்டிரகூடனை வென்று, களைத்துப் போன சமயம் பார்த்துத்தானே தாக்கினர்கள்? அவரும் தம்முடைய படையில் பெரும் பகுதியை அப்பொழுது இழந்துவிட்டிருந் தாரே, - யானை படுத்தாலும் குதிரை மட்டத்திற்குக் குறைவில்லை. ஆனால், இப்பொழுது. - இப்பொழுது மட்டும் என்ன வந்துவிட்டது? ஏன் இந்த அறியாமை? ஆ! எவ்வளவு பெருந்தன்மை யுடையவர் பல்லவர் கோளரி! சீ பேதையே! வாயை மூடு! என் எதிரிலேயே என் பகைவனைப் புகழத் தொடங்கிவிட்டாயே, நீ என் மனைவியா? இளவரசே! ஆத்திரத்தில் அறிவை இழந்துவிட வேண்டா. உங்கள் இருவரையும், ஏன்? உங்களுடன் சேர்ந்துகொண்டு படை எடுத்தவர்களையுங்கூட எவ்வளவு பெருந்தன்மையுடன் மன்னித்தார் அரசர்? முட்டாளே, மன்னிக்கவில்லை அவன். என்னையும் தம்பியையும் கொன்றுவிட்டால் நாட்டில் கலகம்