பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தெள்ளாற்று நந்தி வேடிக்கை? வெட்கப்பட வேண்டியது என்ன இருக்கிறது? - இள உன் கணவன் அரசன் என்று நினைத்துப் பெருமைப் படுவதை விட்டுவிட்டு, இளவரசன் என்று நினைக்கவும் பேசவும் உனக்கு வெட்கமாக இல்லையா? மங் ஐயோ! இதென்ன பேச்சு? மீண்டும் பழைய பைத்தியம் பிடித்துக்கொண்டு விட்டதா? இன்னும் ராஜத் துரோக எண்ணம் உங்களைவிடவில்லையா? உறுதி கூறினீர்களே? இள போடீ பைத்தியம். அரசர்கள் சத்தியம் செய்வ்தும் தேவைக்காக அதனை மீறுவதும் புதுமையல்ல: அது நியாயமுந்தான். . மங் நந்திவர்மர் உப்பைத் தின்றுவிட்டு அவருக்கே துரோகம் நினைப்பது. - இள மங்கை! நாவை அடக்கிப்பேசு. நானா அவன் உப்பைத் தின்கின்றேன்? என் தந்தையின் சொத்தில் எனக்கு இல்லாத உரிமை இவனுக்கு என்ன வந்தது? மங்: என்ன பேச்சு இது? யார் காதிலாவது இது எட்டினால் நம் கதி என்ன? அது போகட்டும். எவ்வளவு பெருந்தன்மையுடன் அவர் உங்களை மன்னித்தார்? வேறு மன்னராக இருந்து. இள என்ன உளறுகிறாய் மங்கை வேறு மன்னராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தலையை வாங்கி இருப்பானா? இந்த இளநந்தியை இன்னும் நீ புரிந்து கொள்ளவில்லை. மங்: நிறுத்துங்கள் உங்கள் வீரப் பிரதாபத்தை. என்னிடமே அளக்கத் தொடங்கி விட்டீர்களா? அண்ணன், தம்பி இருவரும் கடல்போன்ற படையுடன்தான் நந்தித்