பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 9 7 நந்தி : அஞ்சாமல் கூறு.ஏன் இழுக்கிறாய்? இள : ஒன்றுமில்லை. நம் தந்தையர் ஒருவர் என்றாலும்.என் தாய் வேறு என்பதை நான் மறக்கவில்லை அரசே! நந்தி : ஐயனே, இதற்கா இவ்வளவு வருத்தம் ? அப்பெருமாட்டியை என் தாயாகவே நான் மதிக் கிறேன். என் தந்தையார் விரும்பி ஏற்றுக்கொண்ட அவர் என்னுடைய தாய்தானே? அதற்காக ஏன் வருந்தவேண்டும்? நாளை அரண்மனையில் சந்திக்கலாம். (மீட்டும் வாத்திய இசையும் வாழ்க ஒலியும்)

  • r 寰 *

இளநந்தி வீடு. நேரம் - இரவு) மங்கை : என்ன? இப்படி உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக விடியுமட்டும் உறங்காமல் சுற்றி வருகிறீர்களே? இள (எதையோ யோசித்துப் பேசும் குரலில் ஆ.நிச்சயம். உறுதி.இன்னும். * மங் : என்ன, நான் கூறுவதே காதில் விழவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்தத் தீவிர ஆராய்ச்சி? எது நிச்சயம்? எது உறுதி: இளவரசே! இள : என்ன சொன்னாய் மங்கை, இளவரசா? lLfrrrr ? நானா? இளநந்தியா? உன்னை இளவரசி என்று பிறர் அழைப்பதை நீ விரும்பினால், அதற்கு நான் ஏன் பிணையாகவேண்டும் : (கேலிச் சிரிப்புடன்) இளவரசு! இளவரசன்!.. இளநந்தியா இளவரசன்? வேடிக்கைதான்! வெட்கம்! வெட்கம்!! மங் : நாதா என்ன இப்படி நீங்களே பேசிக்கொள்கிறீர்கள்? ஐயோ...எனக்குப் பயமாக இருக்கிறதே! இதில் என்ன தெ.ந.-2