பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தெள்ளாற்று நந்தி இளவரசனாகிய நான் கலந்துகொள்ளாமல் இருப்பேனா? - நந்தி : இதுவரை எங்கே போயிருந்தீர்கள் இருவரும்? இள : பொதுமக்களோடு கலந்து அவர்கள் மகிழ்ச்சியில் பங்குகொண்டோம். நாங்களும் பொது மக்கள் தாமே? z: நந்தி : இளநந்தி!. என்ன வார்த்தை? உன்னையும் நாகநந்தியையும் பொதுமக்கள் என்று யார் கூறினார்கள்? நீங்கள் முன்னர்ச் செய்த தவறுகளை என்றாவது நான் நினைவூட்டினேனா? இள இல்லை அரசே. அதற்குச் சொல்லவரவில்லை. அரசனை அல்லாத பிறர் அனைவருமே பொதுமக்கள் என்ற கருத்தில் கூறினேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டா, நந்தி : தம்பி. இப்போரின் வெற்றியில் உனக்குப் பெரும் பங்கு உண்டென்பதை யான் மறக்கவில்லை. இள : (மெல்லிய சிரிப்பு நான் என்ன செய்துவிட்டேன்! மன்னர் பிரானின் வீரத்துடன் ஒப்பிட்டால் என் வீரமெல்லாம் எங்கோ சென்று மறைந்துவிடும்! நந்தி : இளநந்தி! என் தந்தைதானே உன் தந்தையும்? நம் இருவர் வீரமும் சமமாகத்தானே இருக்க முடியும்? இள : ஆனால்3 بہاپ ،چ مئی 4.یہ. நந்தி : தம்பி, என்ன ஒருமாதிரியாகப் பேசுகிறாய். உன் முகமும் செழிப்பாக இல்லை. உன் விருப்பம் எதுவென்று தெரிவித்தால் அப்படியே செய்வேன் என்று தெரியாதா? ஆனால் என்று இழுப்பானேன்? (சற்று மெளனம் ஏன் வாய்மூடி இருக்கிறாய்? இள : இழுத்தாற்போல் அதற்கில்லை.