பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

  • இளையவன்

திரி திரி : வி. : திரி வீட திரி : வீட : திரி :

என்ன அப்பா இது? மண்ணுளோர், விண்ணுளோர்

அனைவரும் அவர் நட்புக்கு அலைகின்றனர். அத்தகைய இராகவரிடம் நட்புக் கொண்டதற்கு நீங்கள் வருந்துவது பொருத்தமாகத் தெரிய வில்லையே! -

நட்புச் செய்தது தவறு இல்லையம்மா. மற்றையோர்

பயன் கருதாது நட்புச் செய்தனர். ஆனால், நான் அவ்வாறு இல்லையாம். என்ன அப்பா, அந்தக் காலத்தில் நீங்கள் சேரும் பொழுது பிறவி நோய்க்கு மருந்தாகும் அவர் திருவடி, என்றல்லவா கூறினர்கள்? ஆம் அம்மா சொன்னேன். ஆனால், அதை யாரும் நம்பவில்லை ! ஏன் ? அந்த இராகவர்சுட நம்பவில்லை போலும்!

ஐயோ! இது என்ன புதுமை! நாங்கள் அனைவரும்

வேறுவிதமாக அல்லவா நினைத்தோம்? அவர் இவ்வாறு நம்பவில்லையா? ஆம் அம்மா, இப்பொழுது சந்தேகமில்லை என்றுதான் தோன்றுகிறது. - - அவரே சொன்னாரா அப்பா உங்களிடம்?. அவர் வாய்விட்டுச் சொல்ல வேண்டுமா? நான் உள்ளே நுழைந்தவுடன் என்னை வா என்று அழையாமல், குகனையும் சுக்கிரீவனையும் தழுவிக் கொண்டது போலத் தழுவிக் கொள்ளாமல் இருந்து விட்டார். சும்மா இருந்தாலும் தேவலாமே என்னைக் கண்டவுடன்! இந்தா வீடணா! இலங்காபுரி ராஜ்யம்' என்றல்லவா சத்தியம் செய்தார்? அப்படியா! ஏன் அப்பா. உடனே நீங்கள் இராகவரே, அதற்காக நான் வரவில்லை; உம்மைக் காண்பதற்