பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் 231. விட : திரி : திரி திரி வீட திரி காகத்தான் வந்தேன் என்று கூறி இருக்கலாமே! ஏன் கூறவில்லை? கூறினாலும் பயன் இல்லை அம்மா திரிசடை! ஏன் அப்பா?. - உனக்குத் தெரியாதம்மா! அங்கிருந்தவர்கள் முன்னமே என்னைப்பற்றிப் பேசினார்களாம். சுக்கிரீவன், நான் தமையனாரைச் சமயத்தில் கைவிட்ட துரோகி என்று கூறினானாம். அனுமர்தான் என்னை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறிக் காரணமும் கூறினாராம். . . அவர் மிகவும் நல்லவர் என்பது எனக்கு அப்பொழுதே தெரியும் அப்பா! என்ன காரணம் கூறினாராம்? என்ன நல்லவரை நீ கண்டுவிட்டாய்? நான் அண்ணன் அரசின்மேல் காதல்கொண்டு சமயம் பார்த்துப் போனேனாம்! என்ன சமயம் தெரியுமா? வாலியைக் கொன்றார் இராமர் என்று தெரிந்துதான் பிறகு போனேனாம். அம்மட்டோ? இராகவர்கூடக் 'காதல் அருத்தியும் அரசின்மேற்று' என்று நான் வந்த காரணத்தை விளக்கினாராம்.

அப்புறம் என்ன?

அப்புறம் என்னவா? எப்படியோ உண்மை தெரிந்து கொண்டார்கள். பிறகு என்ன செய்வது? ஐயோ! நேர்ந்த பழியை இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது!

சரி அப்பா! புலவனிடம் ஏன் சென்றீர்கள்? சாப்பிட்டுக்கொண்டே என்னிடம் கூறுங்கள். .

தெ.ந.-16