பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு 241 இரா இரா கவனத்தை இழுக்கவில்லை என்பதை அறிந்து பேசாமல் இருந்துவிட்டேன். பர்ண சான்லக்கு வெளியே மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. ! அப்படியா! நீ இப்பொழுது கூறின பிறகு தான் கவனிக்கிறேன். ஆம்.

இது கார்காலம் என்பதை மறந்துவிட்டீர்களா அண்ணா: வெளியே வந்து பாருங்கள். முல்லைக் கொடிகள் எவ்வளவு அழகாக, குளத்தில் மூழ்கி எழுந்த பெண்கள் போல ஆடி அசைகின்றன ! இந்திரகோபப் பூச்சிகள் இரத்தம் போன்ற நிறத்துடனும், பட்டுப் போன்ற உடலுடனும் உலாவத் தொட்ங்கிவிட்டன. வந்து பாருங்கள்.

என்ன! கொடி ஆடுகிறதா? ஆ! சீதையின் இடையைவிடவா இம் முல்லைக்கொடி துவளும்? இந்திரகோபப் பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றனவா? ஆம்! நான் படும் பாடு அந்தப் பூச்சிகளுக்கு எங்கே தெரியப் போகிறது. அவற்றைப் பார்த்தால் உடனே சானகியின் பவழம் போன்ற உதடுகள் நினைவுக்கு வந்துவிடும். ஏன் அந்தப் பூச்சிகள் இந்தப் பக்கம் வருகின்றன? ஆம்! அவை என்னைக் கேலி செய்யத்தான் வருகின்றன. இராவண கோபத்தால் வருந்தும் என்னை இந்த இந்திரகோபங்கூடத் துன்புறுத்தத் தொடங்கி விட்டதே! ஐயோ! இந் நேரம் சீதை என்ன செய்கிறாளோ! எப்படிக் கவலைப் படுகிறாளோ! இசையுடன் பாடுகிறான்) 'அரிது போகவோ விதிவலி கடத்தல் என்றஞ்சிப் பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாராச் சுருதி நாயகன் வரும்வரும் என்பதோர் துணிவால் கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற - கண்ணாள்.