பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பிரிவு இரா இரா : கிறது. காலம் பார்த்து இடம் பார்த்துப் பகையை அழிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

இலக்குவா! நன்றாகக் கூறினாய்! ஆஹா ! இதன்

பெயரா கோதண்டம் ! நல்ல வில்லடா! நீதான் இதனைப் புகழ வேண்டும்! சானகியை மீட்கச் சத்தியற்ற இதுவும் ஒரு வில்லா? இந்தத் தோளுக்கு அழகு செய்யத்தான் இந்த வில் இருக்கிறது! (கேலிச் சிரிப்பு) அண்ணா, எல்லை மீறிய உங்கள் வருத்தத்தை அறிகிறேன். ஆனால், உங்களையும் உங்கள் வில்லையும் நம்பித்தான் உலகம் இருக்கிறது என்பதை மறந்தீர்களா? நீங்களே கவலையில் மூழ்கி விட்டால், உலகம் என்ன ஆவது? நல்ல வேடிக்கை!! என் மனைவியைக் காப்பாற்ற முடியாத நான் உலகத்தைக் காப்பாற்றுவதாவது! ஒவியத்தில் எழுதக்கூடாத அழகியாம் சானகியைக் கவர்ந்து சென்றவனைப் பழி வாங்க முடியாத இந்த வில், இருந்தால் என்ன, இற்றால் என்ன ? மலைபோன்ற தோள்கள் என்று பெண்கள் பார்த்து மயங்குவதற்கு அல்லாமல், வேறு இத் தோள்களால் பயன் என்ன? சரி, துரங்கப் போகட்டுமா? (மழையும் இடியும் முழங்குகின்றன)

அண்ணா, பொழுது விடிந்து ஐந்து நாழிகை ஆகிவிட்டதே! இனியா உறங்கப்போகின்றீர்கள்?

பொழுது விடிந்துவிட்டதா? வியப்பாய் இருக்கிறதே! இவ்வாறு அந்தகாரம் சூழ்ந்துள்ளது ஏன்? க் உங்கள் வருத்தத்தின் எல்லையை அறிகிறேன். பாதி இரவிலேயே மழையும் இடியும் பேரிரைச்சல் செய்யத் தொடங்கிவிட்டன. ஆனால், அவை உங்கள்