பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு 239 இலக் இரா இலக் இரா இலக் தோன்றினான்? விஷத்துடன் பிறந்த இவனுக்கு வேறு என்ன நற்குணம் இருக்கப்போகிறது? : அண்ணா, உங்கள் பிரிவுத்துயர் இவ்வாறு பேசச் செய்கிறது. அதே பாற்கடலில் இதே சந்திரனுடன் தானே என் அண்ணியாரும் தோன்றினார்கள்? ஆகவே, என் அண்ணியாருடைய நற்குணங்களில் இவனுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை மறந்துவிட வேண்டா.

இலக்குவா! என்ன் கூறினாய்? அண்ணியா? அண்ணி சீதை-சானகி-ஆ! எங்கிருக்கிறாய் கண்மணி! தம்பி, என் கண்மணி எங்கிருந்தாலும் அவள் இருக்கும் இடத்திற்கூட இந்தப் பாவி சந்திரன் தோன்றித்தானே இருப்பான்? -

(வருத்தமான இழுகுரலில்) ஆம் அண்ணா தோன்றித்தான் இருப்பான். - ஆ! அப்படித் தோன்றினால், ஐயோ! என் கண்மணி என்ன பாடுபடுவாள்! இவன் வாரிக் கொட்டும் தழலை அவள் பொன்போன்ற உடல் எவ்வாறு தாங்குமோ! அனலிடைப்பட்ட தளிர் போல் அல்லவா வாடிவிடும்! அவளுடன் பிறந்தவனா இவன்? ஆம்! உடன்பிறந்தே கொல்லும் வியாதி போன்ற பாவியல்லவா இந்தச் சந்திரன் ஆ! கொடியவனே, உன்னை ஒழித்துவிடுகிறேன்! தம்பி, எடு வில்லை!

அண்ணா, சிறிது பொறுங்கள்! யாருக்காக உள்ள வில்லை யாருக்காக எடுப்பது ? பதினைந்து நாளுக்குள் வளர்ந்து பதினைந்து நாளுக்குள் தேய்ந்து அழியும் இவனைத் தண்டிக்க வில்வேறு வேண்டுமா? உங்களுடைய கோதண்டத்தையும் மலை போன்ற தோளையும் பயன்படுத்தத் தக்க சமயம் வேறு இருக்

தெ.ந.-17