பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ம் பிரிவு இலக் : இரா : இலக் இரா கருமையில் நூற்றில் ஒரு பங்கு உண்டா இந்த இருளுக்கு? 을' அண்ணா, அதோ! அதோ! நமது கவலை போலச் சூழ்ந்துள்ள இந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு, நம்மை மகிழ்விக்கச் சந்திரன் புறப்பட்டு விட்டான்!

சந்திரனா? இவனா சந்திரன்! இவனையா தண்மதி

என்று கூறுகிறது உலகம்? என்ன அறியாமை! அண்ணா, உண்மையிலேயே இவன் குளிர்ச்சி யுடையவன்தானே? பகலவனது வெப்பம் தாங்காமல் வாடி வதங்கிய உயிர்கட்குக் கருணை மழைபோலத் தன் குளிர்ந்த கிரணங்களைப் பரப்பி மகிழ்ச்சி அளிக்கிறவன் இவன் அல்லவா? இலக்குவா, என்ன உளறுகிறாய்? இந்தப் பாவியைப் புகழவும் தொடங்கிவிட்டாயா? நெருப்பை வாரி வீசும் இவனைத் தண்மதி என்றா வாய்கூசாமல் கூறுகிறாய்? இவன் கொட்டும் தணல் தாங்காமல் ஆகாயமுங் கூடக் கொப்பளங்களால் நிரப்பப் பட்டுவிட்டது தெரியவில்லையா?

நட்சத்திரங்களையா கொப்புளங்கள் என்று கூறுகிறீர்கள்? அது கிடக்கட்டும். எத்தகையவர் களாலும் ஒவ்வொரு நன்மை ஏற்படத்தான்

செய்கிறது. ஆனால், ஒருவர்க்கு நன்மையாய் இருப்பது மற்றொருவர்க்குத் தீமையாய் முடிகிறது என்ன செய்வது! - தம்பி, நீ சொல்வது சரிதான். ஆனால், இந்தச் சந்திரனைப் பொறுத்தமட்டில் ஒருவருக்கும் இவன் நன்மையே செய்ததில்லை. ஆலகால விஷம் தோன்றிய பாற்கடலிலேதானே இவனும்