பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு நாடக பாத்திரங்கள் இராமன் 3. சீதை 2. இலக்குவன் 4. திரிசடை 1 o இராமன் : (பாடுதல்) - 'மானவள் மெய்இறை மறக்க லாமையின் ஆனதோ, அன்றெனின் அரக்கர் மாயமோ, கானகம் முழுவதும் கண்ணின் நோக்குங்கால், சானகி உருவெனத் தோன்றுந் தன்மையே! இலக்குவன் : அண்ணா, எவ்வளவு கொடுமையுடையதாய் இருக்கிறது இரவு! இவ்வளவு கருமையை இதற்கு முன் நாம் கண்டதே இல்லையல்லவா? இராமன் : தம்பி, இலக்குவா! என்ன கூறினாய்? இதற்கு முன் நாம் கண்டதில்லையா? ஆம்; நீ கண்டிருக்க மாட்டாய். ஆனால், நான் இதைவிடக் கருமையான ஒன்றைக் கண்டு அனுபவித்திருக்கிறேன். இலக் என்ன அண்ணா, நான் இத்தனை காலம் உறக்கங் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். ஆனாலும், நான் காணாத கருமையை நீங்கள் கண்டதாகக் கூறுவது விந்தையே! என்றைக்கு, எங்கே கண்டீர்கள்? இரா : அதை ஏன் இப்பொழுது கேட்கிறாய்? ஆ! நினைத்தாலும் மனம் வெடித்துவிடும் போல இருக்கிறது! சீதையின் கருவிழிகள் காட்டும்