பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இளையவன் திரி : கடவுள் தன்மை பெற்ற இராகவருக்கு உதவி செய்ததில் தவறு என்ன அப்பா? மறத்தை வெல்ல அறத்திற்கு உதவியதில் தவறு என்ன இருக்கிறது? விட : இருக்கிறது அம்மா, இருக்கிறது! நான் யார், அறத்திற்கு - உதவ? நான் இல்லாமலும், அறம் வென்றிருக்கும். நான் உதவினேன் என்பதற்கு அர்த்தமே இல்லை. இராமருக்கு உதவிய ஒருவரும் கெட்ட பெயர் வாங்கவில்லை. நான் மட்டும் ஏன் வாங்க வேண்டும், தெரியுமா? - திரி : எனக்கு ஒன்றும் விளங்கவில்லை அப்பா! விட : இதோ சொல்லுகிறேன்; கேள்! மறத்தை வெல்ல அறத்திற்கு உதவி மட்டும் செய்திருப்பேனானால், இப் பெயர் வந்திராது. சொந்த இலாபத்தைக் கருதித்தான் அறத்திற்கு உதவினேன் என்ற பெயர் வாங்கிவிட்டேன். ஆதலாலேதான் அவ்வறமும் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை-அண்ணா, மைந்தா, உங்ளைவிட அனைத்திலும் இளையவன் ஆனேன்! அந்தோ! (திரை)