பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் 235 வீட திர : விட : திரி திரி வீட தொழுதியோ! யாதோ செய்யத் துணிந்தனை ? விசயத் தோளாய்?"

ஒ, அண்ணா! அசுரர்கள் தம் பிரளயமே, அமரர்

ஏறே, எங்கு ஒளித்தாய் அண்ணா! (அழுகிறான்) 5 (அந்தப்புர மாளிகை வீடணன், திரிசடை) அப்பா, அப்பா, இது என்ன? ஏன் அழுகிறீர்கள்? யாருடன் இதுவரை பேசினர்கள்? தூக்கம் வரவில்லையா? ஏன் உடல் நடுங்குகிறது? எதனால் இந்த வியர்வை உண்டாயிற்று? ஒன்றுமில்லை அம்மா! கனவு கண்டேன். கனவிலேதான் பேசினர்களா? யாருடன் பேசினர்கள்? அந்த இளஞ்சிங்கம் இந்திரசித்தனுடன்தான் பேசினேன். ஐயோ! என்ன கேள்விகள் கேட்டான் தெரியுமா! நன்றி கெட்டவனாம் நான்; துரோகியாம் நான். ஐயோ! எனக்கு ஏன் இந்த இலங்கை அரசு! இது இருக்கும்வரை ஒரு வினாடியும் உறக்கம் வாராது போலிருக்கிறதே! என்ன அப்பா, இப்படிப் பேசுகிறீர்கள்? ஆம் அம்மா, இராகவர் எதிரில் இருக்கிறவரை அவருடைய அமைதியில் நானும் உன்னை மறந்து, நான் செய்தவற்றை எல்லாம் அறம் காட்டிய வழி என்று நம்பி, என்னை மறந்து இருந்தேன். அவர் போன பிறகு பிறர் சொல்ல, நான் செய்த செயல்களுக்கு அவர்கள் கூறும் அர்த்தம்-ஐயோ!என்னை வாட்டுகின்றது!