பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ல் பிரிவு திரி : நல்ல வேடிக்கை அம்மா! கடலை யாராவது சிறை வைக்க முடியுமா? - (பறவைகள் அலறுகின்றன) சீதை : அதோ! திரிசடை, கேட்டாயா அன்றிலின் அலறலை? காதலைப் பிரிந்த அந்தப் பறவையும் என்னைப்போலவே விழித்துக்கொண்டு கதறுகிறது. தனிப்பட்ட புல்லாங்குழல் ஒசை-எதுகுல காம்போதி இசைக்கப்படுகிறது) அட பாழுங்குழலே! நீ கூடவா இராவணன் கட்சியில் சேர்ந்துவிட்டாய்? எனக்காக வருத்தப் பட்டு அழுகிறாயா, அல்லது உன் காதலனைப் பிரிந்து என்னைப் போல வருந்துகிறாயா? திரி : அம்மா, இது என்ன பாவம்: இவற்றையெல்லாம் பார்த்து ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? இவை களுக்கும் உங்கட்கும் என்ன தொடர்பு? சீதை : திரிசடை, குழந்தை நீ உன்மேல் குற்றம் இல்லை. இந்தப் பாழான கடலும், அன்றிலும், புல்லாங் குழலும், நீருண்ட கரிய மேகமும், பூரணசந்திரனும் ஒழிந்துவிட வேண்டும்! இவை ஒழிந்தால்தான் நான் சற்று மன அமைதியுடன் இருப்பேன். ஐயோ! இந் நேரம் அவர் எப்படி இருப்பாரோ? திரி : யாரைப்பற்றிக் கூறுகிறீர்கள் அம்மா! சீதை என் கணவரைப்பற்றித்தான் கூறுகிறேன். யார் வெற்றிலை மடித்துக் கொடுக்க அவர் தின்பார்? விருந்தினர் வந்துவிட்டால் அவரும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கண்ணிர் பெருக நிற்பார்களே! ஐயோ! பாவி ஏன் பிறந்தேன்!