பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தெள்ளாற்று நந்தி பாரி வாழ்ந்தான். இன்று தமிழ் என் உயிரை விரும்பினால் அதை விருப்பத்துடன் தரக் காத்து நிற்கிறேன். அனைவர் : ஆஹா என்ன தமிழ்ப் பற்று? என்ன தமிழ் அன்பு: வாழ்க தெள்ளாற்று நந்தி!! நந்தி : புலவரே! உலக இலக்கியங்களில் ஒன்றாகிய மகா பாரதத்தைத் தமிழில் பாடிப் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்ற சிறப்புப் பெயர் பெற்றீர். பாரதம் பாடிய அத் திருவாயால் என்னையும் பாடும் பெருமையைப் பெற்றேனே. அதுவே என் தவம். புலவர் : நந்தி! உன் வீரமும், தமிழ்ப் பற்றும், பல்லவ மரபில் மிகச் சிறந்த மன்னனாக, உன் பெயர் விளங்க வழி வகுத்துவிட்டன. நந்தி : புலவரே! இதுவரை வாழ்ந்த பல்லவ மன்னர்கள், உலகம் இதுவரைக் காணாத குடைவரைக் கோயிலைக் கட்டி உலகப் புகழ் பெற்றனர். அது மகிழ்ச்சிக்குரிய செயல்தான். என்றாலும் மகேந்திரவர்மன், நரசிம்ம வர்மன் போன்றவர் தமிழ்ச் சுவை அறியாது போய்விட்டனர். புலவர் : நந்தி: மகேந்திரன், நரசிம்மன் என்பவர்கள் காலத்தில் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய பெரியார்கள் வாழ்ந்தார்களே. நந்தி: ஆம் ஐயனே திருவதிகை விரட்டானத்தில் குணபர ஈச்சுரம் கட்டின மகேந்திரன் திருநாவுக்கரசர் பாடலை அனுபவியாமல் போனது வருத்தத்துக் குரியதே. அஃது அவன் தவக்குறை. - புலவர் : வாழ்க உன் தமிழ்ப் பற்று. மன்னா!