பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 15 நந்தி

பெருந்தேவனாரே! தங்கள் பாடலைக் கேளாமல்

ருநதே த இதுவரை ஏதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டேன். எங்கே பாடலைப் பாடுங்கள், கேட்கலாம். புலவர் ; இதோ, நந்தி அமை (சங்கராபரணம்) 'வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால் உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால் தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு) யார்வேந்தர் ஏற்பார் எதிர் ? ஆஹா! ஆஹா! என்ன பாடல்? என்ன அழகு? அமைச்சரே, ஆயிரம் பொற்காசுகளைப் புலவர்க்குப் பரிசிலாக வழங்குக. அப்படியே அரசே இனித் தம்பியாருக்குச் சன்மானம் செய்யலாமா? நந்தி : அப்படியே செய்யலாம். எங்கே இளநந்தியும், இள, நாகநந்தியும் நம்முன் வாருங்கள். நாக வணங்குகிறோம் அரசே! உமது புகழ் மேலோங்குவதாக,

தம்பி, தெள்ளாற்றுப் போரில் நீங்கள் காட்டிய வீரமும் மனத் திடமும் நமக்குப் பெருவியப்பை அளித்தன. பல்லவ சாம்ராச்சியம் உங்கட்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. -
அரசே! ஏன் எங்களை எல்லைமீறிப் புகழ்கிறீர்கள்?

எங்கள் கடமையை நாங்கள் செய்தோம். எங்களைக் காட்டிலும் பெருந்தொண்டு செய்பவர்கள் பலருண்டு இப்பெரு நாட்டில்! யாங்கள் அறியாமல் இல்லை.