பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முத்தநாதன் தத்தை வேறு என்ன வழி? அவருக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளையாவது மணந்து கொள்ளலாம். மகளும் இல்லையே..! முத்த தத்தை, அந்த மெய்ப்பொருள் ஒரு முட்டாள். பைத்தியக்காரன் ! - தத்தை ஆஹா! இரவு முழுதும் தூங்காமல் இருந்து பெரிய உண்மையைக் கண்டுபிடித்து விட்டீர்கள்! உங்களைப் பன்முறை தோல்வியடையச் செய்த அவரா முட்டாள்? முத்த போரில் வெற்றி பெற்றுவிடுவது போதுமா? நாடாளத் தெரிய வேண்டாவா? தத்தை : ஏன்? அவருக்கு நாடாளும் பாடம் கற்றுத் தருவதுதானே நீங்கள்...? முத்த அதற்குச் சொல்ல வரவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பூசை, கோயில், குளம், அடியார் என்று பொழுதைச் செலவழிக்கிறான் அந்தப் பைத்தியக் கrரன் ! - * தத்தை : அதனால் அவர் ஒன்றும் குறைந்துபோய் விட வில்லையே? பொழுதை எப்படிக் கழித்தாலும் போரில் வெற்றி அவருடையதாகத்தானே இருக்கிறது..? முத்த இருக்கட்டும்! இனி அவனுக்கு வெற்றி என்பதே இல்லாதபடி செய்துவிடுகிறேன்! தத்தை : சும்மா உறங்குங்கள்! ஒவ்வொருமுறையும் இப்படித்தான் கூறினர்கள். முத்த தத்தை, இம்முறை அவனை ஒழிக்காவிட்டால், என் பெயர் முத்தநாதன் அன்று! பார்!