பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தநாதன் 247 தத்தை : யார் இருக்கவேண்டா என்கின்றனர்? ஆனால், வேறு எந்த அரசராவது உங்களைப்போல உறங்காமல் விழித்துக்கொண்டிருப்பது உண்டா? முத்த அந்த மெய்ப்பொருள் போன்ற பைத்தியக்கார அரசன்தான் நன்றாகத் தூங்க முடியும்! தத்தை : மெய்ப்பொருளையா பைத்தியக்காரன் என்கிறீர்கள்? அவர் பெரிய மலை நாட்டின் தலைவர் அல்லரா? முத்த நீ மிகவும் அறிவாளி என்பது உன்னுடைய எண்ணமோ! அவன் பெரிய அரசன் என்பதை உன்னைக் கேட்டு நான் தெரிந்துகொள்ள வேண்டுவதில்லையே! - தத்தை : அட ஆண்டவனே ..... நீங்கள் மெய்ப் பொருளினிடம் பலமுறை தோற்றுப் போனால், அதற்கு நான் பொறுப்பாளியாக முடியுமா? முத்த முட்டாள் !....நான் தோற்றுப் போனதை நீ எடுத்துக்காட்ட வேண்டா! எனக்குத் தெரியும் அவனை ஒழித்துக்கட்டும் வழி! - தத்தை யாராவது அந்த வழியைக் கையாண்டு உங்களை வெற்றி பெற வேண்டா என்று கூறினரா? மூத்த : இப்பொழுதுதான் அந்த வழியைக் கண்டு பிடித்தேன்! - - - தத்தை : எனக்குத் தெரியாதா உங்கள் வழி? இன்னும் ஒரு முறை படை சேர்த்துக்கொண்டு சென்று போரிடப்போகிறீர்கள்! அதனுடைய முடிவும். முத்த வாயை மூடு முடிவைப்பற்றி உன்னைக் கேட்கவில்லை. படை எடுத்துச் சென்று அந்த மெய்ப் பொருளை வெற்றி கொள்வது இயலாத காரியம்.