பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முததநாதன நாடக பாத்திரங்கள் 1. முத்தநாதன் 4. மெய்ப்பொருள் நாயனார் தத்தை 5. மெய்ப்பொருள் நாயனார் மனைவி காவலன் 6. தத்தன் 7. காவலர் இருவர் 1. முத்தநாதன் அரண்மனை : முத்தநாதனும் தத்தையும்) தத்தை : நாதா, இன்னுமா உறங்காமல் இருக்கிறீர்கள்? இரவு இரண்டாஞ் சாமத்திற்குரிய மணிச்சத்தம் கேட்கிறதா?

முத்த (வெறுப்புடன்) ஆம்; கேட்கிறது! என்னை இப்பொழுது என்ன செய்யச் சொல்லுகிறாய்? தத்தை : என்மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு உங்கட்கு: ஏதாவது தகாத காரியம் செய்து விட்டேனா? முத்த : உன்மேல் குறை ஒன்றும் கூறவில்லை நான் மனத்தில் பகைமை மூண்டுவிட்டால் உறக்கம் எப்படி வரும்? தத்தை பகைமை யார்மேல் மனைவியாகிய என்மேலா மூத்த என்ன விளையாடுகிறாய், தத்தை! அரசனாகிய எனக்குப் பகைவர்கள் இருப்பதுதானே அழகு?