பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 முத்தநாதன் மெய் : (அப்பொழுதுதான் விழித்தவர் பேசும் குரலில் ஏன்? அடியார் யாரேனும் வந்துள்ளனரா? அல்லாவிடின் என்னை எழுப்பமாட்டாயே! மெய். மனைவி : ஆம் நாதரே! சிவனடியார் ஒருவர் வந்துள்ளார். - மெய் வருக! வருக! பெருமானே, நான் என்ன தவஞ் செய்தேனோ நீங்கள் இங்கு இன்று வருவதற்கு! х முத்த மெய்ப்பொருள், நீ அடியாரிடத்துக் கொண்டுள்ள அன்புக்காக இன்று உனக்கு உபதேசம் செய்ய வந்துள்ளேன். - மெய் : இஃது எனது நற்பேறு என்றே கருதுகிறேன் சுவாமி, அருளிச்செய்ய வேண்டும்! . முத்த : அப்படியானால் நீயும் நானும் தனியே இருக்க வேண்டும். உன் மனைவி அப்பாற் சென்றுவிட வேண்டும். - மெய் : அப்படியே ஆகட்டும்-தேவி, நீ அப்பாற் சென்றுவிடு. - - (அரசியார் சென்றவுடன் முத்தநாதன் தன் கையிலுள்ள குறுவாளால் மெய்ப்பொருளின் மார்பில் குத்துகிறான்.) . மெய்: ஆ.குத்தப்பட்டவர் குரலில் என்ன நல்ல காலம்! ஓர் அடியார் கையால் குத்தப்பட்டு இறப்பதைவிடச் சிறந்த பேறு வேறு என்ன? - தத்தன் : (ஓடிவந்து ஆ: அரசே, நான் அப்பொழுதே சந்தேகப்பட்டு இந்த வஞ்சகனைத் தடுத்தேன். இதோ! இவனை ஒரு நொடியில் ஒழித்து விட்டு. மெய் தத்தா, நில்! நில்! இவர் அடியாரல்லரா? இவரை நீ என்ன செய்யத் துணிந்தாய்: