பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தநாதன் 251 தத்தன் : அரசே ஆணை. அடியேன் என்ன செய்ய வேண்டும்? *மெய் : அப்பா, வேறு என்ன வேண்டும் எனக்கு? இவ்வடியார் தம் ஊர் போய்ச் சேரும் வரை இவருக்கு யாதொரு தீங்கும் நேராதபடி கொண்டுபோய் விட்டு வா. 3 (முத்தநாதன் அரண்மனை. முத்தநாதனும் தத்தையும்) தத்தை : அரசே, நீங்கள் மகிழ்ச்சி அடையும்படியான செய்தி ஒன்றைத் துதுவர் ஒருவர் கொண்டு வந்துள்ளனர். - - முத்த (வெறுப்புடன்) என்ன செய்தியாம்? தத்தை உங்கள் பகைவர்-மெய்ப்பொருள் இறந்து விட்டாராம். எப்படி இறந்தார் தெரியுமா? முத்த (கவலையின்றி) எப்படியாம்? * தத்தை : பாவம்! அடியார் என்றால் அவருக்கு எதையும் செய்யக்கூடியவர் மெய்ப்பொருள். முத்த இருக்கட்டுமே! அதற்கென்ன? தத்தை : அந்த உண்மையைத் தெரிந்துகொண்டு எந்தப் பாதகனோ ஒருவன் அவரிடம் அடியார் வேடத்தில் சென்று உபதேசம் செய்வதாகக் கூறிக் கொன்று விட்டானாம்! மகா பாதகன்! மூத்த அவனுக்கு மெய்ப் பொருளிடத்தில் என்ன பகைமையோ! யார் கண்டார்கள்! . . . தத்தை : எவ்வளவுதான் பகைமை இருக்கட்டுமே. உங்களுக்குக்கூட அவரிடம் பகைமை இருக்கத் தான் செய்தது. என்றாலும், நீங்கள் இவ்வளவு இழிந்த செயலைச் செய்யத் துணிய மாட்டீர்கள் அல்லவா?