பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 முத்தநாதன் முத்த : குத்தினவன் தான் வந்த காரியத்தை முடித்து விட்டதால் அவனும் வெற்றியடைந்துவிட்டான். தத்தை இல்லை. குத்தினவன் கொஞ்சநஞ்சம் வெற்றி என்று நினைத்தாலும் மெய்ப்பொருள் அவனை மன்னித்துவிட்டதால் அதுவும் வெற்றி அன்று. முத்த அவன் அதை வெற்றி என்று நினைத்தால் யார் அதைத் தடுக்க முடியும்? - தத்தை : யாரும் தடுக்க முடியாதுதான். ஆனால், கொன்றவன் ஒரு பகையை அழித்ததாக நினைத்துக் கொண்டு மற்றொரு பகையைத் தேடிக் கொண்டான். முத்த . (பயந்த குரலில்) நீ கூறுவது ஒன்றும் விளங்கவில்லையே! தத்தை : மெய்ப்பொருள் குத்தினவனுக்குப் பகைவர் தான். - ஆனால், எப்படிப்பட்ட பகைவர்? முத்த எப்படிப்பட்ட பகைவனா? விளங்கவில்லையே! தத்தை : அவனாகச் சென்று வம்பிழுத்தால் ஒழிய, மெய்ப்பொருள் அவனுக்கு ஒன்றும் துன்பம் செய்திருக்க மாட்டார். முத்த இருக்கலாம். அதற்கென்ன? தத்தை : அதற்கென்னவா? அவரை வஞ்சகமாகக் கொன்றவன் அவரைவிடக் கொடிய பகையைஎப்பொழுதும் துன்புறுத்தும் பகையைத் தேடிக் கொண்டான். முத்த (பயந்த குரலில் என்ன புரியாமல் பேசுகிறாய். -- தத்தை? விளங்கும்படி விவரமாகக் கூறித் தொலை. யார் அப்படிப்பட்ட பகைவன்? தத்தை : நீங்கள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?