பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தநாதன் 255 முத்த அது கிடக்கட்டும்! யாரந்தப் பகைவன்? விரைவில் கூறு பார்க்கலாம்! . தத்தை : வேறு யாரும் அல்ல, குத்தினவனுடைய மனச்சாட்சிதான். முத்த அப்பா! இவ்வளவுதானா! மிகவும் அச்சுறுத்தி விட்டாயே! தத்தை உங்கட்கு ஏன் அச்சம் உண்டாகிறது? (சந்தேகத்துடன்) ஒரு வேளை இந்தக் கோழைத்தனமான செய்கையை நீங்களே. முத்த : சீச்சி! நானாவது இத்தகைய செய்கையில். தத்தை அதுதானே கேட்டேன்! சரி, நேரம் ஆகிவிட்டது. உறங்கப் போவதுதானே ? ஏன்? உறக்கம் வரவில்லையா இனியும்? முத்த நன்றாக உறக்கம் வருகிறது! இதோ படுக்கைக்குச் - செல்கிறேன்! 4 முத்தநாதன் அரண்மனை முத்தநாதனும் தத்தையும்) முத்தநாதன் கனவில்) - முத்த : ஐயோ! மெய்ப்பொருள், இல்லை! இல்லை! இனி இத்தகைய கோழைச் செயலில் இறங்க மாட்டேன்! மெய் : அடியவரே, நீர் எதற்கும் அஞ்ச வேண்டா! முத்த :ஐயோ! தத்தா, என்னை விட்டுவிடு: ஐயோ! ஏனோ இந்தக் காரியம் செய்தேன்! தத்தன் : அடே பேதாய்! நீ அடியார் வேடத்தில் இருந்தாலும், நான் ஏமாந்துவிடுவேனா? உன்னை எத்தனைப் போர்க்களங்களில் கண்டிருக்கிறேன்? இதோ உன்னை என் வாளால் இரண்டு துண்டாக்குகிறேன்!