பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தநாதன் 257 தத்தன் : எதற்கா? உன்னை இடையூறு இல்லாமல் கொண்டுபோய் விட்டேன் என்று நான் திரும்பிச் சென்று சொல்கிற வரை அவர் உயிருடன் இருப்பார். முத்த அப்பாடா! உயிர் தப்பியது. (கனவிலிருந்து விழித்துக் கொள்கிறான்) - - தத்தை 1 ஐயோ! இஃது என்ன, வெகு நேரமாக உளறிக்கொண்டே இருக்கிறீர்களே! ஏன் உயிர் தப்பியது என்று கூறினர்கள்: கனவா..? முத்த : ஆம் தத்தை, கனவுதான். ஆ! என்ன பயங்கரமான கனவு! ஐயோ! ஏன் செய்தேன் இந்தப் பாழுங் காரியத்தை! தத்தை எந்தக் காரியத்தைப்பற்றிக் கூறுகிறீர்கள்? முத்த இனி மறைப்பதால் பயனில்லை. ஐயோ! நான் தான் மெய்ப்பொருளை. தத்தை ஆ! என்ன! நீங்களா! இந்தக் காரியத்தையா! நம்ப முடியவில்லையே! என்ன கேவலம்! தமிழன் செய்யும் காரியமா இது? உலகம் உள்ள அளவும் தீராத பழியைத் தேடி. முத்த போதுமே, தத்தை! என் மனச் சாட்சியே என்னைக் கொல்லுகிறது! போதாததற்கு நீயும் வேறு சேர்ந்து கொண்டாயே! இனி இவ்வுலகில் வாழ எனக்கு விருப்பம் இல்லை! தத்தை : தவறான செயல் என்று அறிந்திருந்தும் எப்படிச் செய்ய மனம் வந்ததோ! முத்த ஆம்! மெய்ப்பொருள்தான் வெற்றி பெற்றார். என்னை முழுமனத்துடன் மன்னித்தார்; அம் மன் னிப்பில் வெற்றி கண்டார்! ஆ! மெய்ப்பொருளே, எனக்கு நற்கதி உண்டா?. இல்லை! நான் முழுப் பாவி! வாழத் தகுதி அற்றவன்! இதோ உங்களைக்