பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தெள்ளாற்று நந்தி காப்பியங்களே காரணமாக உள்ளன. அதற்கு நீயும் நானும் வருத்தப்பட்டு என்ன பயன்? சரி, இதோ இந்தப் பரிசில்களைப் பெற்றுக்கொள். குரல் 1: இளவரசர் இளநந்தி வாழ்க! வாழ்க! குரல் 2: இணையற்ற அடலேறு இளநந்தி வாழ்க! வாழ்க! - இளநந்தி முதலியோர் செல்லல்; மன்னனும் அமைச்சரும் மட்டும்) அமை : அரசே, இளநந்தியின் மனநிலையைக் கவனித் தீர்களா? நந்தி : ஏன் அமைச்சரே? எனக்கு ஒன்றும் புதுமையாகத் தெரியவில்லையே? முதலில் அவனுக்குப் பரிசில் கொடுக்காமல் புலவருக்குத் தந்ததில் அவன் வருத்தமடைந்துவிட்டான். அமை - இல்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை. இளவரசரின் மனநிலையிலும் அரச பக்தியிலும் யான் கொண்டுள்ள ஐயம் வலுப்படுகிறது. தான் செய்த தவற்றை நினைந்து வருந்தும் ஒருவனுடைய மனநிலையை அவனுடைய முகக் குறிப்பிலிருந்தே காணலாம். ஒரு மனிதனின் முகக் குறிப்பைக் கொண்டு அவனுடைய உள்ளத்தில் ஓடுகின்ற எண்ண ஓட்டங்களை உள்ளவாறு அறிவது அமைச்சனாகிய எனது கடமையாகும். எப் பொழுதும் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதும், சக்கரவர்த்திகள் பேசும் போது வஞ்சகம் நிறைந்த சிரிப்புடன் பதில் பேசுவதும், சிரிக்க வேண்டிய காலங்களில் சிரிக்காமல் இருப்பதும், இளவரசர் இளநந்தி, தோல்வியினால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்கவேயில்லை என்பதை அறிவிக்கின்றன. எனவே, எதிர்காலத்தில்