பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 19 இளநந்தியால் அரசர் பெருமானுக்கு என்ன ஊறு விளையுமோவெனச் சிந்தித்துக்கொண்டேயிருக் கின்றேன். நந்தி : அமைச்சர் எதிர்காலத்தை ஆய்வது முறை என்றாலும், தகுந்த காரணமின்றி ஒருவன்மேல் ஐயம் கொள்வது முறையன்று. அமை : நாய் வாலை நிமிர்த்த முயல்வதும், பாம்புக்குப் பால் வார்ப்பதும், பால் வார்த்து அதனுடன் நட்புச் செய்தலும் இயலாத காரியம் அரசே யானையைப் போன்றவர்களுடன் நட்புக் கொள்ளலாகாது எனப் பெரியவர்கள் கூறிய அறிவுரையை இந்நிலையில் அரசர் பெருமானுக்கு நினைவூட்ட வேண்டியது அமைச்சனாகிய எனது கடன். நந்தி : உம் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாயினும் அவனால் என்ன செய்துவிட முடியும்? ஒருமுறை படையெடுத்து நம்மிடம் பட்ட பாட்டை அதற்குள் மறந்துவிட அவ்வளவு முட்டாளா அவன் என் தந்தையின் மைந்தனை அவ்வளவு குறைத்து மதிக் யான் விரும்பவில்லை. - அமை : அரசே, இளநந்தி படைகொண்டு நம்மேல் வருவதை நான் என்றுமே அஞ்சவில்லை. வாள் போல் வெளியே புறப்பட்டுவிட்ட LI 45) 5 Ql ೯೮)pr அஞ்சமாட்டேன் அரசே, ஆனால், கேள் போல் பகையாக, உட்பகையாக அவர் வஞ்சக மனத்துடன் இருத்தலையே அஞ்சுகிறேன். நந்தி : (சிரித்துவிட்டு அமைச்சரே, இளநந்தியிடம் நீர் இத்துணை அச்சங் கொண்டிருப்பீர் என்று நினைக்கவும் நாம் வெட்கப்படுகிறோம். அது கிடக் கட்டும், அவன் படைகொண்டு தாக்கமாட்டான்