பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தெள்ளாற்று நந்தி எனில் வேறு எவ்வாறுதான் நம்மைப் பழிவாங்கப் போகிறான்? அமை : அதுபற்றிதான் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக் நந்தி கிறேன். . கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு முதலிய இடங்களில் எல்லாம் சோழனையும் பாண்டியனையும் முறியடித்த நம் வெற்றித் திறனைக் கண்ட யார்தாம் நம்மைத் தாக்கத் துணிவார்கள்? அச்சத்தை விட்டொழியும் அமைச்சரே. அமை : ೨TGಆ! மன்னித்தருள வேண்டும். தாங்கள் கூறிய அனைத்தும் வாளால் பெற்ற வெற்றிகள். வாள் கொண்டு எதிர்த்துவரும் பகையை நான் அஞ்சவில்லை. ஆனால் சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம் இவற்றை இதுவரை எதிர்த்துப் போராடி நமக்குப் பழக்கம் இல்லையே! இவற்றை எதிர்த்து இவற்றிற்குத் தக்கவகையில் வஞ்சகத்திற்கு வஞ்சகமும் சூழ்ச்சிக்குச் சூழ்ச்சியும் செய்ய வேண்டியது அமைச்சனாகிய என்னுடைய கடமை என்பதை யான் என்றும் மறவேன்! சக்கரவர்த்திகள் தமிழ் இலக்கியக் கடலுள் ஆழ்ந்துவிட்டமையாலும், ஒப்பற்ற வீரம் பெற்றிருத் தலாலும், உலகில் மறைந்துள்ள ஒரு பகுதியைக் காணவே மறந்து விட்டீர்கள். உண்மையைக் கூறப் போனால், பொய், வஞ்சகம், சூழ்ச்சி, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், அடுத்துக் கெடுத்தல், நம்பினோர்க்கு நயவஞ்சகம் புரிதல் ஆகிய பல குணங்கள் சக்கரவர்த்தியின் சிந்தனைக்கும் காட்சிக்கும் அப்பாற்பட்டிருக்கின்றன. அரசர் பெருமான் அதனைக் காணமுடியாத காரணத்தால் இவையெல்லாம் இல்லையென்றோ, இருப்பினும் ஒன்றும் செய்யமாட்டா என்றோ நினைப்பது