பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தெள்ளாற்று நந்தி யிருக்க, மாபெரும் மன்னன் ஒருவனை எதிர்க்க வேண்டுமானால் அதற்குரிய காலம் பார்க்க வேண்டாவா? மேலும், காஞ்சிபுரம் பல்லவனின் தலைநகர் ஆயிற்றே. சகதியில் அகப்பட்டுக் கொண்டால் யானையையும் நரிவென்றுவிடும் என்ற குறளை மறந்து இத் தலைநகரிலேயே இருந்து கொண்டு பல்லவனைப் பகைப்பது எங்ங்னம் ? இவற்றையெல்லாம் தாங்கள் சிந்தித்துப் பார்த்துச் சிறந்ததோர் திட்டம் திட்ட வேண்டுமென்று கூறினேனே தவிரத் தங்கள் வல்லமையையோ, அறிவுக் கூர்மையையோ குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்று எண்ணவேண்டா.

இவை எல்லாம் வன்மையும் தன்னம்பிக்கையும் அற்

ԱվւD :% եւյւD -*յի)ը) எளிய மன்னர்கட்காக எழுதப்பெற்றவை என்பதை யான் அறிவேன். வல்லவன் கையில் புல்லும் ஆயுதமாம். தனி நின்று போர் செய்தால் இந்த நந்தித் தொண்டைமான் என் முன் எம்மாத்திரம்: "எலிகள் பலவாக இருப்பினும் நாகம் சிறியவுடன் அனைத்தும் அழிந்துவிடாவா? தெள்ளாற்றில் பெற்ற வெற்றியால் மதி மயங்கி இருக்கும் இவனுக்கு விரைவில் அழிவைத்தேட வேண்டும். பகைமையை இளமை யிலியே களைய வேண்டும். செல்வி : ஆருயிரே! பகைமையை இளமையில் களைய வேண்டும் என்பது சரி. ஆனால், எவ்வாறு? முள்ளை முள்ளாலும் வஞ்சனையை வஞ்சனையாலும் அறிவை அறிவாலுமே வெல்ல வேண்டும். பல்லவ மன்னனைப் படை கொண்டு வெல்லமுடியா தென்பதை முன்னரே கண்டு விட்டோமே? இள ; செல்வி ஓயாமல் அதையே நினைவூட்டி என் நொந்த மனத்தில் வேல் கொண்டு பாய்ச்ச வேண்டா. இனி, அவனை ஒழிக்க வழி யாது?