பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 25 செல்வி : வழியை யான் அறியேன். ஆனால், படையெடுத்து வெல்லக் கருதுவது அறியாமை என்பதை மட்டுமே என்னாற் கூற முடியும். 'காதல, காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் என்பது குறள். எனவே, ஒருவன் எதில் அதிக விருப்பம் கொண்டுள்ளானோ அந்த வழியிற் புகுந்து அவனை வீழ்த்த வேண்டும். இந்தக் குறளைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் ஒருண்மை புலப்படும். எத்தகைய பெருவீரருக்கும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். எதிரி அறிவுடையவனாக இருப்பின் இந்தக் குறைபாட்டை நன்கு ஆராய்ந்து அதையே தான் புகும் வாயிலாக அமைத்துக் கொள்ளவேண்டும். எல்லை மீறிய விருப்பம் எப்போதும் ஆபத்தையே செய்யும். பகைவனுக்கு எதில் அதிக விருப்பமோ அந்த விருப்பத்தையே துணையாகக் கொண்டால் வெற்றி பெறுவது உறுதி. (சிந்தனையைக் கிளறும் குரல் ஆ! எதில். எதில். அதிக விருப்பம் . கொண்டுள்ளானோ? அதே. வழியில். புகுந்து, அவனை வீழ்த்த வேண்டும்? அன்று கிழட்டு அமைச்சன் கூறினானே, இத் தமிழ்ப் பற்று என்றாவது உங்கட்குத் தீங்கு விளைவிக்கும் என்று. (மகிழ்ச்சியுடன் உரத்து) ஆம், ஆம். கண்டேன் வழி! தொலைந்தான் நந்தி! இனி எனக்குப் பகை என்பதொன்றில்லை. வெற்றி, வெற்றி, வெற்றி எனதே. செல்வி : (பதற்றத்துடன் காதலரே. என்ன கூறுகிறீர்கள்? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே? இள செல்வி: இப்பொழுது ஒன்றும் என்னைக் ലേstളേ. விரைவில் உன் காதலன் பல்லவ மன்னன். சில நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு விரைவில் மீள்வேன். அதுவரை பொறுத்திரு. -