பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தெள்ளாற்று நந்தி கல, கல, இள கல, கல, இள : H6U இளநந்தி போதல் ,蜜 演 寮 (சிறிய வீடு, இளநந்தி, கலம்பகப் புலவர்) புல : இளவரசே வரவேண்டும். என்னுடைய சிறிய குடிலைத் தேடித் தாங்கள் வர என்ன தவஞ் செய்தேனோ? எளியேனால் ஆகக்கூடிய காரியம் எதுவாயினும் ஆணைக்குக் காத்து நிற்கின்றேன். :: ஐயா, கலம்பகப் புலவரே, நீர் கலம்பகம் பாடுவதில் மிக்கத் திறமையுடையவர் என்று கேள்விப்பட்டு வந்தேன். . புல : மகிழ்ச்சி, ஐயனே, தாங்கள் ஆணை யாதோ? நம் சக்கரவர்த்தி தெள்ளாறு எறிந்த நந்திவர்மர் மேல் ஒரு கலம்பகம் பாட முடியுமா? புல : ஆகும்! அவ்வாறே செய்கிறேன். மிக்க மகிழ்ச்சி யோடு செய்யக் காத்து நிற்கிறேன்.

புலவரே, நீர் அறம்பாடுவதில் வல்லவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் அறம் வைத்துப் பாடினால் பாடப்பட்டவர் உறுதியாக இறந்து விடுவார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது முற்றிலும் பயன்பட வேண்டும். - புல : (அச்சத்துடன்) இளவரசே, நான் இன்னுஞ் சிலகாலம் உயிர்வாழ விரும்புகிறேன்.

கலம்பகப் புலவரே, கவலை விடுக. உம் பெயரையே வெளியிட மாட்டேன். பாடல் பயனளித்து விட்டால் நாம்தான் பல்லவநாட்டுச் சக்கரவர்த்தி. பிறகு உம்மை நன்கு கவனித்துக் கொள்கிறேன். புல (மிகுந்த அச்சத்துடன்) பெருமானே.