பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 27 இள : கவலை வேண்டா புலவரே, பாடல் சிறந்திருக்கட்டும். பத்து நாட்களில் உம்மிடம் வந்து பாடலைப் பெற்றுப் போகிறேன்! யான் வந்து போன தகவல் இரகசியக் குரலில் யாருக்கும் தெரிய வேண்டா. நினைவிருக் கட்டும். 竇 實 * இடம்: செல்வி வீடு) செல்வி : வாருங்கள் அடிகளே, வணக்கம். ஏது, இந்த ஏழையின் வீட்டைத் தேடி வந்தது? இள நன்று. நன்று, என் வேஷம் நன்கு பலித்து விட்டதடி செல்வி! நீயே என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையானால், இளநந்தியின் வெற்றி உறுதிதான்! சந்தேகமில்லை, வெற்றி பெற்றுவிடுவான் இளநந்தி. - செல்வி . ஏன் இம் மாறுவேஷம்? இத்துணை நாட்கள் எங்குச் சென்றிருந்தீர்கள்? இள : (பெருஞ்சிரிப்புடன்) எங்குச் சென்றிருந்தேனா? அப்படிக் கேள். என் பகைவனை ஒழிக்க வழிதேடிச் சென்றேன், செல்வி : மீண்டும் அதே கவலைதானா? இன்னும் படை சேர்த்துக் கலகம் செய்யும் எண்ணத்தை விட வில்லையா? - - இள : συπις. பைத்தியமே? படை எதற்கு? எளிதாக எண்ணத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்து விட்டேன். செல்வி :(ஆச்சரியத்துடன்) என்ன, என்ன? ஏற்பாடு செய்து விட்டீர்களா? என்ன ஏற்பாடு? எனக்குச் சொல்லக் கூடாதா? -