பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 * தெள்ளாற்று நந்தி செல்வி : உங்கள் துணிவுக்கு நான் துணை செய்ய முடியுமா என்ற ஐயம் ஏற்படுகிறது இளவரசே. நம் இருவர் . தலைக்கும். . இள (சிரித்து பல்லவநாட்டு மணிமுடி கிடைக்கப் போகிறது. இதோ பார் செல்வி, நான் இங்கிருந்தால் பிறர் ஜயங்கொள்ள நேரிடும். ஆகையால். செல்வி : (அச்சத்துடன்) என்ன, என்ன? தாங்களும் இங்கு இருக்கப்போவதில்லை шт? - இள ஆம், புளியங்காட்டில் துறவி வேடத்தில் ஒளிந்து கொண்டிருப்பேன், - செல்வி : (நடுக்கத்துடன் இளவரசே. இள செல்வி: உன் கலைத்திறமை பல்லவநாட்டுச் சரித்திரத்தையே மாற்றி அமைக்கப் போகிறது. நான் வருகிறேன். பல்லவநாட்டு அரசியே, நான் சென்று வருகிறேன். (லேசாகச் சிரித்துக் கொண்டே செல்கிறான்) ; : • 竇 (அரண்மனை) . . (நந்தி, அமைச்சர்) - நந்தி : அமைச்சரே, உம்முடைய அச்சத்திற்கு உண்மையில் காரணமில்லை என்பதை இப்பொழுதாவது உணர்ந்தீரா? அமை : அரசே, புயலுக்கு முன் ஏற்படும் அமைதியாகவே இதனைக் கருதுகிறேன். சில நாட்களாக இளநந்தி தலைநகரத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார் என்று நம் ஒற்றர்கள்மூலம் அறிந்தேன். ஆனால், எங்குத் தேடியும் அவர் அகப்படவில்லை.