பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 31 நந்தி ஆம், இளநந்தியின் மனைவி மங்கையும் ஒரு நாள் நம்மைக் கண்டு பேசினாள். என்னைப் பழி வாங்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தானாம் அவன். அவள் அறவுரை கூறி அவன் மனத்தை மாற்றிவிட்டாளாம். அமை : அப்படியா அரசே என்னிடம் முன்னமே இதனை நந்தி அறிவிக்கவில்லையே. தம்பியோ மனைவியின் சொற்கேட்டு மனம் மாறிவிட்டான். தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி, அவ் வருத்தத்தைப் போக்கிக் கொள்ள ஊர் சுற்றப் போய்விட்டான். அதனால்தான் உம்மிடம் இதுபற்றிக் கூறவில்லை. அமை : இனித்தான் நாம் விழிப்புடன் இருத்தல் வேண்டும். நந்தி பாம்பு முதலிய விஷ விலங்குகள் அனைவரும் காணும்படி கிடக்கின்ற வரையில் ஒன்றும் ஆபத்து நேருவதில்லை. ஆனால், அதே பாம்பு செடி, புதர் மறைவில் புகுந்துவிட்டால் மாபெரும் படையும்கூட அதனைக் கண்டு நடுங்கும். உள்ளத்தில் கரவுடைய இளநந்தி போன்றவர்கள் எதிரே நடமாடிக் கொண்டிருக்கின்ற வரையில் ஒரளவு அவர்களைக் கண்காணிக்க நம்மால் முடியும். ஆனால் தலைமறைவாகிவிட்டார் என்றால், மிகவும் விழிப் புடன் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இன்றிரவு நகர் சோதனைக்கு மாறுவேடத்துடன் செல்வோமா?

அப்படியே செய்யலாம். ஆனால், ஊரை விட்டு ஒடிப்போனவனைத் தேட மாறுவேடம் பூண்டு இரவிலா செல்லவேண்டும்?

அமை : அரசே என் சொற்களைத் தட்டவேண்டா என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.