பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 35 தோழி : ஏனம்மா இப்படிப் பதறுகிறீர்கள்? முகம் எல்லாம் வெளுத்துவிட்டதே ? என்னிடம் சொல்லுங்கள் அம்மா. நான். செல்வி : (சமாளித்துக்கொள்பவள் போல்) ஹும், ம்.. ஒன்றுமில்லை ஒன்றுமில்லை, அங்கயற்கண்ணி, நீ. நீ. போய் (மீண்டும் பதட்டம் ஹா, இல்லை, இல்லை. நான். நானே போகிறேன். 竇 资 宵 (அரண்மனைக் கொலுமண்டபம்) (அரசன், அமைச்சன், புலவர்.) நந்தி : அமைச்சரே! நேற்று அவ்வரிய பாடலைப் பாடிய பெண்ணை அழைத்து விசாரிக்கலாம் என்று கூறினர்களே? எங்கே அந்தப் பெண்? அமை : அரசே, அழைத்துவரத்தான் காவலர்களை முன்னரே அனுப்பிவிட்டேன். இதோ அவளும் வந்துவிட்டாள். (செல்வியும் காவலர்களும் வருதல்) நந்தி: வருக, பெண்ணே! செல்வி என்பது உன் பெயர் என அறிந்தோம். எத்தகைய இனிய குரலைப் பெற்றிருக் கிறாய் நீ! ஆ எவ்வளவு இனிய பாடல்களைப் பாடினாய்? அத்துணைச் சிறந்த பாடல்களை யார் உனக்குக் கற்றுத்தந்தனர்? செல்வி : (மிகுந்த அச்சத்துடன்) அரசே மன்.ணித்துக். கொள்ள.... வேண்டுகிறேன். எனக்கு ஒன்றும் தெரியாது. யான் ஒன்றும் பாடவும் இல்லையே. எப்பொழுது பாடினேன்? - - நந்தி : பெண்ணே, செல்வி: அஞ்சவேண்டா பல்லவன், பெண்கட்கு அச்சமூட்டும் பண்புடையான் அல்லன்.