பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தெள்ளாற்று நந்தி நேற்று இரவு 10 நாழிகை அளவில் நீ பாடிக் கொண்டிருந்தாயே, அதைத்தான் கேட்கிறேன். "சிவனை முழுதும் மறவாத சிந்தையான்" என்ற பாடல், யார் பாடியது? செல்வி : (அழுகையும் அச்சமும் கலந்த குரலில்) ஐயோ, என்னை விட்டுவிடுங்கள். அரசே, எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை ஒன்றும் செய்ய வேண்டா, ஐயோ, என்னை விட்டுவிடுங்கள். அமை : பெண்ணே, ஏன் இவ்வளவு அச்சமும் பதட்டமும்? யார் உனக்கு இப் பாடலைக் கற்றுத் தந்தவர் என்றுதானே அரசர் கேட்கிறார்? அதற்கு விடை கூறுவதை விட்டுவிட்டு ஏன் இவ்வாறு அழுது அடம் பிடிக்கிறாய்? இதில் ஏதோ சூது இருக்கிறது. இதனைக் கண்டுபிடிக்காமல் உன்னை விட மாட்டேன். நந்தி : அமைச்சரே, ஏன் அவளை அச்சுறுத்துகிறீர்? தமிழ்ப் பாடலைக் கேட்டு, அதில் சூது இருக்கிறது என்று கூறும் அளவிற்கு உம்முடைய அச்சம் வளர்ந்துவிட்டதா? செல்வி, அப் பாடலையாவது இப்பொழுது ஒருமுறை பாடு, கேட்கலாம். இச் சபையில் உள்ளவர் அனைவரும் அதனைக் கேட்டு மகிழட்டும். - . o புலவர் : நந்தி, நீ கூறுவனவற்றைக் கேட்டதிலிருந்து அப் பாடல்களை எவ்வாறாயினும் ஒரு முறை கேட்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துவிட்டது. எங்கே பெண்ணே பாடு பார்க்கலாம்? செல்வி : ஐயோ, அரசே, நான் பாடவில்லை; என் தோழிதான் பாடினாள். என்னை விட்டுவிடுங்கள். அப்பாடலை நீங்கள் கேட்கக் கூடாது. நான் போய் விடுகிறேன். r