பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 37 நந்தி : (சினத்துடன்) என்ன உளறுகிறாய்? என்னைப் பற்றிப் புகழ்ந்து பாடும் பாடல்களை நான் கேட்கக் கூடாதா? ஏன்?... செல்வி : நான். சொல்லமாட்டேன். எனக்குத் தெரியாது. நந்தி : என்ன தெரியாது உனக்கு? செல்வி : அதுவா?. அதுவா. அது. அது. அதை ஒரு துறவி என் தோழிக்குக். கற்றுத். தந்தார். நந்தி நன்று நன்று! துறவிகள் தவஞ் செய்வதை விட்டுப் பரத்தையின் தோழிக்குப் பாட்டுச் சொல்லித் தரும் நிலை வந்துவிட்டதா தமிழ்நாட்டில்? இனி இந்த நாடு வாழ்ந்தாற்போலத்தான். துறவி கடவுளைப் பற்றிப் பாடாமல் அரசனைப் பற்றிப் பாடுவது ஒரு வியப்பு? அதைவிட வியப்பு அதை ஒரு பரத்தைக்குச் கொல்லித் தருவது? (சிறுநகை யாரம்மா அந்தத் துறவி..? செல்வி : எனக்குத் தெரியாது அரசே அமை - உன்னைச் சிறையில் தள்ளிக் கசையடி தரச் சொல்லப் போகிறேன். உண்மையைச் சொல்லப் போகிறாயா, இல்லையா? யாரங்கே.. இவளைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் செல்லுங்கள். செல்வி : ஐயோ, வேண்டா, வேண்டா அரசே! இதோ கூறிவிடுகிறேன். - நந்தி : ஏன் இப்பாட்டை நான் கேட்கக் கூடாது? செல்வி : (விக்கல் அழுகையுடன்) அதை. நீங்கள் கேட்டால், நீங்கள். துக்கம்) ஐயோ, என்னால் சொல்ல முடியாது. . நந்தி : இருக்கட்டும். உன் தோழி யாரிடம் இதனைக் கற்றாள்? z