பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தெள்ளாற்று நந்தி செல்வி : தங்கள். தம்பி... இளநந்திதான் கற்றுக் கொடுத்தார். நந்தி : இளநந்தியா? இத்துணைப் பெரிய கவிஞனா அவன்? தெரியாமற் போய்விட்டதே? எங்கே அவன்? செல்வி : அவர்.துறவியாக. புளியங்காட்டில். நந்தி : அவன் இங்கு இல்லையா? பின் இப் பாடலை இள நந்தி சொல்லிக்கொடுத்தான் என்றாயே? செல்வி : இளவரசர் ஏற்பாடு செய்த கற்றுச்சொல்லி சொல்லிக் கொடுத்தான். நந்தி : அப்படியா? மகிழ்ச்சி அமைச்சரே, இச் செல்வியை அவள் வீட்டுக்குக் கொண்டுவிடச் சொல்லுங்கள். உடனே அந்தக் கற்றுச்சொல்லியை அழைத்துவரச் செய்யுங்கள். தம்பி என்மேல் எவ்வளவு அன்புடன் அரிய பாடல்களைப் பாடியுள்ளான். ஆ! எம் தந்தை நந்திவர்மப் பல்லவர் இருந்திருந்தால், தம் மக்களில் ஒருவன் வீரன், மற்றவன் உடலிலும் வீரன், அறிவிலும் சூரன், கவிஞன் என்று கண்டு எவ்வளவு பூரிப்படைவார். தம்பி, நீ இத்துணைப் பெரிய கவிஞன் என்பதை அறியாமல் இருந்துவிட்டேனே? என்னே என் அறியாமை. . ч ஆ. இத்தகைய அரிய பாடல்களைக் கேளாமல் எனக்கு உணவு செல்லவில்லை, உறக்கம் பிடிக்கவில்லை. "பெற்ற தாய்தனை மக மறந்தாலும்" இப் பாடலை நான் மறவேன். அமைச்சர் : அரசே பாடல்கள் நன்றாக இருக்கலாம். ஆனால், முன்பின் ஆராய்ந்து பாராமல் இவ்வளவு பற்று வைப்பது சரியன்று. பரத்தையின் பதட்டத் திலிருந்தும் அவள் சொல்லத் தயங்கியதிலிருந்தும்