பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 39 நந்தி இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று நினைக் கிறேன்.

அமைச்சரே, கேலிக் குரல் இப் பாடல்களால் எனக்கு ஏதேனும் தீங்கு வருமென்று நினைக்கின்றீரா? அன்றொருநாள் யான் கூறியது நினைவில்லையா? போர்களும், வெற்றிகளும், பேரரசுகளும் அழிந்து மறையக்கூடியவை. மாபெரும் சக்கரவர்த்திகளும் முடிவில் ஒருபிடி சாம்பல்தான். ஆனால், கலையும் கலையை அனுபவிக்கும் மனமுமே என்றும் நிலைபெற்றவை. யானும் நீரும்

அழிந்த பிறகும் இப் பாடல்கள் அழியா இயல்பு பெற்று வாழும். அத்தகைய பாடல்களைக் கேட்பதற்குப் பணயமாக, என் உயிரையும் தரச் சித்தமாக இருக்கிறேன். அமை : கவலை கலந்த குரல்) அப்படி ஏதேனும் நிகழ்ந்து நந்தி அமை விடுமோ என்றுதான் அஞ்சுகிறேன். கவலை இல்லை. வீரனும் கலைஞனும் ஒரே முறைதான் இறப்பார்கள். வீரன் போர்க்களத்தில் உயிர் விடுவதையே விரும்புவான். ஆனால், போர் இனி இல்லையாகலின், எனக்கு அந்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. கலைஞனாகலின் சிறந்த கலையை அனுபவிப்பதனால், உயிர் போவதாயின், யான் அதனையே பெரிதும் விரும்புகிறேன். கற்றுச் சொல்லி வர ஏற்பாடு செய்யுங்கள்?

இதோ வந்துவிட்டான்

நந்தி : கற்றுச்சொல்லி! செல்வியின் தோழிக்கு நீ கற்றுத் தந்த பாடலைப் பாடு, கேட்க ஆவலாக இருக்கிறேன். கற்று : (அழுகை அரசே, அதுமட்டும் என்னால் முடியா தெ.ந.-4